இருவரை விபத்திற்குள்ளாக்கி விட்டு தப்ப முனைந்த வடமத்திய மாகாண முதலமைச்சர்(படங்கள்)

300 0

accident-001வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்னவின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்த இருவர் வேறொரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, முதலமைச்சரின் வாகனம் பல மணித்தியாலங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகிரிய பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்  ஜனக்க பண்டார தென்னக்கோனின் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியரின் வாகனத்திலேயே இந்த விபத்தில் உயிரிழந்த நபரும் தானும் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்தாக விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்;.

இந்த விபத்தில் உயிரிழந்த நபர் கூலி தொழிலாளி என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பில் முதலமைச்சரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

accident-002 accident-003 accident-004 accident-005 accident-006 accident-007 accident-008