மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் காவல்

321 0

batticaloaமட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.