ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

315 0

1133315669womenarres1கொம்பனிவீதி – டோசன் பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது இவர் வசம் இருந்து 5 கிராம் 30 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொம்பனிவீதிப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவரை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.