தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லையா? – ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி

351 0

குரூப் 1 தேர்வு இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் வழியில் படித்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதில் பலர் இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மதுரையை சேர்ந்த சக்திராவ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:  “தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க இடஒதுக்கீட்டு சலுகை தந்தால் அதையும் தவறாக பயன்படுத்துகின்றனர். தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும். தமிழ் வழியில் பயில்வோருக்கு இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.