யாழ்.உடுப்பிட்டி பகுதியி தோட்டக் கிணற்றில் இருந்து பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)

5387 76

K800_image5யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வல்வை வீதியில் உள்ள தோட்டக் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையாக வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள நேசவு சாலைக்குப் பின்புறமாக காணப்படும் தோட்டப் பகுதயில் உள்ள கிணற்றுக்குள் இருந்தே இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
69 கைக்குண்டுகள், 25 மோட்டார் பரா எறிகணைகள், 11 மோட்டார் எறிகணைகள் போன்றவையே இதன் போது மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுடிருந்தவரகள் இணற்றுக் அடிப்பகுதியில் ஆயுதங்கள் இருப்பதை கண்டுள்ளனர்.
இது தொடர்பாக அத் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர் ஊடாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதன் பின்னர் அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் அவ்வாயுதங்களை மீட்டு அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

K800_image1 K800_image2 K800_image3 K800_image4 K800_image6 K800_image7

Leave a comment