யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகம் இன்று மாலை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகள் எதனையும் நடத்தக்கூடாது என அங்கு நின்ற முன்னணியின் உறுப்பினர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு நினைவுகூருவதற்கு யாராவது முற்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் எச்சரித்தனர்.
அதேவேளையில் முன்னணியின் அலுவலகத்தில் நின்ற செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரால் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.