தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் 02.11.2007 அன்று சிங்கள வான்படையின் வான் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
இவருடன் லெப்.கேணல். அன்புமணி ( அலெக்ஸ் ) மேஐர்.மிகுதன், மேஐர் கலையழகன் (நேதாஜி)லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன், மேஐர்.செல்வம் ஆகியோரும் வீரச்சாவைத்தழுவிக்கொண்டனர்.
இம் மாவீரர்களின் 13 ஆவது நீங்காத நினைவில் ( கோவிட் 19 பிரான்சு நாட்டின் பொது முடக்கம் காரணமாக பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் திருவுருவச்சிலைக்கு ( லாக்கூர்னோவ்) முன்பாக 01.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு பிரான்சு மாநகரசபை முக்கியஸ்தர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள், லான்கூர்னோவ் தமிழ்ச்சங்கத்தினர் மட்டுப்படுத்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி சுடர்ஏற்றி மலர் கொண்டு நினைவேந்தல் வணக்கம் செய்திருந்தனர்.