பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார்.
நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகள் வாங்கியது குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:
விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் கிடைக்கும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார்.
மக்கள் பிரச்சனைக்கு பாஜக வராது. ஏனெனில் மக்களின் பிரச்சனையே பாஜகதான்.
இவ்வாறு அவர் கூறினார்.