கனடாவின் கியூபெக் நகரில் மர்ம நபரொருவர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடந்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற இச் சம்பவத்தில் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகே பழங்கால உடையணிந்திருந்ததாக கூறப்படும் குறித்த நபர், பொதுமக்களை சரமாரியாக கத்தியால் தாக்கியதில் 5 பேர் படுகாயடைந்ததாகக் கூறப்படுகின்றது .
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தபொலிஸார் , படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலயில் அனுமதித்ததுடன் தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸார் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பிரான்ஸில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், பிரெஞ்சு மொழி அதிகம் பேசுவோர் உள்ள கியூபெக் நகரில் இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.