சீனாவில் மக்கள் தொகையைக் கணக்கெடுக்கும் பணி மீண்டும் ஆரம்பமானது!

272 0

சீனாவில் தேசிய அளவிலான 7ஆவது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியானது நேற்றைய தினம்  ஆரம்பமானது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை சீனா நடத்தி வருகிறது. இறுதியாக 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 6ஆவது கணக்கெடுப்பில் அந்நாட்டில் 137 கோடி பேர் (1.37 billion)வாழ்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 7வது கணக்கெடுக்கும் பணியை 70 லட்சம் பேர் மூலம் சீன அரசு நேற்றைய தினம் தொடங்கியது.

அவர்கள் அனைவரும் தனித்தனியே ஒவ்வொரு வீடாக சென்று, தனிநபரின் பெயர், அடையாள எண், பாலினம், திருமண விவரம், கல்வி, வேலை குறித்த விவரத்தை சேகரிப்பதாகக் கூறப்படுகின்றது.