நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் எதிர்ப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் இதுவரை காலமும் எதிர்ப்புக்களை வெளியிட சுதந்திரம் இருந்தது.
இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவற்துறை ராஜ்ஜியம் ஊடாக கிரமமான முறையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுத்து செல்லப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.