சேவைப்புறக்கணிப்பால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் வருமானம்

288 0

ctbதனியார் பேருந்துக்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு 120 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்க பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், சில பிரதேசங்களில் பேரூந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 128 பேருந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவத்தில் 8 பொது மக்களும், 23 சேவையாளர்களும் காயமடைந்ததாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.