பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா – ஒருவர் கைது

290 0

1192855177arrstபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த ஒருவர் எதிமலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 3 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

எதிமலை காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த அவர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.