சிறிலங்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 153 பேர் கைது

241 0

சிறிலங்காவில்  தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது 35 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முகக் கவசம் அணியாத மற்றும் கோரோனாவுக்கான சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் 61 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பொலிஸாரினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை புறக்கணித்து மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியக் குற்றச்சாட்டில் 550 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.