சில சக்திகள் சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட, ஆர்ப்பாட்டம் தொடர்பிலான வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த சந்தரப்பத்தில் சிறுபான்மை மக்கள் சமயோசிதமாக அமைதி காக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மட்டக்களப்பு உட்பட பல பிரதேசங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு தமது பணிப்புரையின் கீழ் காவற்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே பொது மக்கள் பிரச்சினைகள் ஏற்படும் விதத்திலோ அல்லது வன்முறையான காரியங்களிலோ ஈடுப்பட வேண்டாமென கிழக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.