இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக பிரவேசித்துஇ மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் பாதுகாப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
ஜாவிட் கத்ரி என்ற இளைஞரே இவ்வாறு சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளார்.
இந்திய பிரதமரின் இணையதளத்தில் பிரவேசித்து அவரின் தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்இ அமைச்சர்களின் தொலைபேசி இலக்கங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்இ தனது எச்சரிக்கையை கவனத்தில் எடுக்காவிட்டால்இ அது பிரதமரின் பாதுகாப்புக்கு சிக்கலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளைஇ இந்த இணையதளத்தை பயன்படுத்தும் 7 மில்லியன் பாவணையாளர்களின் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.