இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்களை திணைக்களத்துக்கு வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்றும், எதிர்வரும் 5ஆம் திகதியும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 17ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இந்தப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியாக 5 ஆயிரத்து 669 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பரீட்சைகளில் பங்குகொள்ளவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.