யாழ்ப்பாணத்தில் 14 பேருக்குக் கொரோனா; 956 பேர் தனிமைப்படுத்தலில்

279 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இம்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள யாழ். மாவட்ட நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக் கின்றது. இந்தநிலையில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள். யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்திக் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.”