பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ம.மதிதாஸ் அவர்களினால் தனது புலம்பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் போரினால் பாதிக்கப்பட்டு; பெற்றோர்களை இழந்த மாணவர்களினதும்;, வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டிற்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இரண்டு லட்சம் ரூபா பெறுமதியில் குறித்த கற்றல் உபகரணங்கள் 234 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பளை மத்திய கல்லூரி அதிபர் திரு. சி.பாலகிஸ்ணன், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு குறித்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.