கடற்படையினரால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

364 0

jaffna-hospitalயாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வடக்கு மாகாண கடற்படை கட்டளைத் தளபதி றியல் அட்மிரல் சில்வா திறந்து வைத்தார்.

நாட்பட்ட சிறுநீர் நோயைத் தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் எண்ணக்கருவிற்கு அமைய கடற்படையின் மூலம் நாடுபூராகவும் தூயநீரைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினூடாக கல்சியமற்ற நீரினைப்பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையினரால் இரண்டாவது திட்டமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆராம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்தின் முதற்கட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

50 இலட்சம் ரூபா பெறுமதியான குடிநீர்த்திட்டத்தை கடற்படையினர் 15 லட்சம் ரூபா பெறுமதியில் அமைத்து வருகின்றனர்