“தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் சம்பந்தன் கொழும்பில் உரை

324 0

sampanthan0-2694-450x253அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து வித்தியாவிருத்திச் சங்கமும் இணைந்து நடாத்தும் கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் அமரர் க.கணேசலிங்கத்தின் பத்தாவது ஆண்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு, கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நாளை (04) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்து மாமன்றத் தலைவர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ‘தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.