112 பவுண்டு எடை கொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்திய மனிதர்

329 0

201612032123521051_north-carolina-man-reels-in-huge-112-pound-catfish_secvpfவடக்கு கரோலினா கேப் பியர் ஆற்றில் தூண்டில் போட்ட ஒருவர் 112 பவுண்டு எடைகொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்தியுள்ளார்.வடக்கு கரோலினாவில் உள்ள கேப் பியர் ஆற்றில் ரியான் ப்ரேவிங்டன் என்பவர் தூண்டில் மூலம் மீன் பிடித்துக்  கொண்டிருந்தார். அப்போது அவரது தூண்டிலில் மீன் ஒன்று மாட்டியதாக உணர்ந்தார். அந்த மீனை அவரால் உடனடியாக இழுக்க முடியவில்லை.

இதனால் பெரிய மீன் மாட்டியிருப்பதை உணர்ந்த அவர், அந்த மீன் போக்கிற்கு விட்டுவிட்டு அதன்பின் கரைக்கு இழுத்தார். அப்போது அவரது தூண்டிலில் மாட்டிய கெளுத்தி மீனைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். 112 பவுண்டு (50.80 கிலோ) எடை இருந்தது. இதற்கு முன் 117 பவுண்டு மீன் மாட்டியதே சாதனையாக இருக்கிறது. ப்ரேவிங்டன் 5 பவுண்டு எடை வித்தியாசத்தில் சாதனையை தவறவிட்டார்.