கனவுகள் நோக்கிய பயணம் – தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு

338 0

தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு, கொலம்பஸ் தமிழ்ச்ங்கம் இளையோர் குழுவுடன் இணைந்து “கனவுகள் நோக்கிய பயணம்” என்னும் நிகழ்வை 25,26 (சனி, ஞாயிறு) ஒக்டோபர்
2020ஆகிய இரு தினங்களும் சிறப்பாக நடாத்தினார்கள். இதற்கான அனுசரனையை கொலம்பஸ் நகரசபை வழங்கியது குறிப்பிடதக்கது.

புலம் பெயர் நாட்டில் புதிய சூழலில் இங்குள்ள கல்விமுறை, எதிர்காலத்தில் என்ன துறையை தேர்ந்தெடுப்பது, எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற விளக்கங்கள் இல்லாமல் எமது முதலாம்
தலைமுறையினர் கல்வியைக் கற்று இன்று உயரிய பதவிகளைத் தொட்டிருக்கிறார்கள். இன்றுள்ள இரண்டாம் மூன்றாம் தலைமுறையிரை அந்தச் சிக்கலில் இருந்து மீட்கும் நோக்கில் “கனவுகள் நோக்கிய பயணம்” என்னும் தலைப்பில் கல்வியில் பல்துறைகளில் உச்சம் தொட்ட எம்மவர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கும் ஒரு சந்திப்பினை கொலம்பஸ் நகரசபையின் அனுசரனையுடன் ஏற்படுத்தி இருந்தனர். இதற்கான ஒழுங்குகள் இளையோர் குழு கொலம்பஸ், கொலம்பஸ் நகரசபை ஊடகா முன்னெடுத்தனர்.

இன்று ஐரோப்பா நாடெங்கும் பரவியுள்ள கொவிட் 19 நுண் கிருமித் தொற்றால் அதனை நடாத்த முடியாத சூழளில் இணையவழி சூம் (zoom) மூலம் நடாத்தப்பட்டது. இதில் வெளிநாட்டவர்கள் உட்பட பல மாணவர்கள் 25, 26 (சனி, ஞாயிறு) இரு தினங்களிலும் ஆர்வத்தோடு பங்குகொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொண்டனர். இதில் பத்திரிகையாளர்,மருத்துவர், இயந்திரப் பொறியியலாளர், கணனிப் பொறியியலாளர், வங்கித் துறை கணக்கியலாளர்,வழக்கறிஞர், ஆராட்சியாளர் என பல பட்டம் பெற்று உயர் பதவி வகிக்கும் எம்மவர் கலந்து ஆலொசனை வழங்கியிருந்தனர். கல்வியின் முக்கியத்துவத்தையும், ஊக்த்தையும் வழங்கினர்.

தொடர்ந்து புருவே (Brevet) தேர்வின் பின் இங்குள்ள கல்வி வழிமுறைகளை தெரியப்படுத்தி பொருத்தமான துறையை தேர்ந்தெடுத்தல் எப்படி என்ற விளக்கம் அளிக்கப்பட்டு பலதுறை சார்ந்து பணிசார்ந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் இந்நிகழ்வு இளையோர் இடையே ஆர்வத்தையும புத்துணர்ச்சியையும் வழங்கியுள்ளது என்பதை அவர்களின் பேச்சுக்களில்
காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக தமிழ் இளையோரோடு பிரஞ்சு நாட்டு இளையோரும் இணைந்து ஆர்வத்தோடு உதவியிருந்தனர்.

ஆரோக்கியமாக நடைபெற்ற நிகழ்வை வரும்காலங்களில் பரந்துபட்டு நடாத்துவதற்கு இளையோர் அமைப்பு பிரான்சு ஆர்வம் கொண்டுள்ளது என்று இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்கள்
தெரிவித்தனர்.