இளங்கோவன் குணமடைந்து வீடு திரும்பினார்

319 0

201612031549200814_elangovan-returned-to-home_secvpfஉடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

காங்கிரஸ் மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவை நீலாம்பூரில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்தது.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன், தங்க பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

2 நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் உடல் நலன் தேறினார். இதையடுத்து அவரை சாதாரண வார்டுக்கு மாற்றினர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவர் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.