கலிபோர்னியா ரேவ் பார்ட்டியில் பயங்கர தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

297 0

201612032203591761_nine-dead-15-missing-in-massive-fire-at-california-rave_secvpfஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரேவ் பார்ட்டியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஆக்லேண்டில் கோஸ்ட் ஷிப் கிளப் உள்ளது. இங்கு உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு ரேவ் பார்ட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மது அருந்தியும் விரும்பிய உணவு வகைகளை சாப்பிட்டும் நடனமாடி மகிழ்ந்தனர்.

அப்போது, சுற்றிலும் மூடப்பட்டிருந்த அந்த கிளப்பின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. இதனால் உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். அவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பலர் தீப்பிடித்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.அந்த கிளப்பிற்குள் 70 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில், தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை என்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.