வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், ஆகையால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக முஸ்லிம் மக்களுடன் பேசி வருகின்றோம்.
எனினும், யுத்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் அவர்களின் மனங்களில் காணப்படுகின்றன. அந்த உணர்வுகள் முஸ்லிம் மக்களிடமிருந்து களையப்படவேண்டும்.
இதனால் புதிய அரசியலமைப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கான பொறிமுறை முன்வைக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.