மகிந்த அணிமீது கண்ணீர் புகைத் தாக்குதல்!

302 0

download-51சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் இன்று காலை நாடாளுமன்றத்திற்கருகில் உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடாத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொல்டுவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கான வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாடாளுமன்றத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்னிலையில் நிலைமையை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகிக்கும் குழுவினர் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது நீர்த்தாரை பீரங்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் என்பன நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.