யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஐவர் கைது

322 0

download-57யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் காவல்துறையினரால் உயர்தர பாடசாலை மாணவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், வாள்வெட்டில் ஈடுபடுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் அடங்கிய கைபேசியொன்றினையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பலரைக் கைதுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுன்னாகம், உரும்பிராய், திருநெல்வேலி, கோப்பாய் பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல தனியார் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாள்கள், 1 உந்துருளி ஆகியன மீட்கப்பட்டுள்ளதுடன், ஐபோன் கையடக்க தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.