மட்டக்குளி சமித்புர பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவதளபதி அறிவித்துள்ளார்.
சமித்புர தொடர்மாடி குடியிருப்பு பகுதியை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 6000 பேரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் விசேட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என இராணுவதளபதி தெரிவித்துள்ளனர்.