சிறிலங்காவில் மேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8,706 ஆக பதிவாகியுள்ளது.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 291 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 02 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 8706 பேரில் 4,646 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் மேலும் 110 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4043ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.