போக்குவரத்துக்காக புறக்கோட்டைக்கு செல்வதில் பயனில்லை – பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

255 0

பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடி புறக்கோட்டைக்கும் கோட்டைக்கும் செல்வதால் பயனில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் ஆகியற்றில் இருந்து பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நடைபெற மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் அங்கு அநாவசியமாக செல்வதைத் தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.