மன்னாரில் கரை ஒதுங்கிய கடற்பன்றி

281 0

ppppமன்னார் கடலோரத்தில் நேற்று இறந்த நிலையில் கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

மிகப் பெரியகடல் மலைபோல கரை ஒதுங்கிய கடற் பன்றியை, கடற்படையினர் அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கே உரித்தான 08 கடற்பன்றிகளில் பாதி அழிவடைந்து விட மிகுதியும் தற்போது அழிவை எதிர் நோக்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கடற்பன்றிகளை காண்பதற்கே அரிதாகவுள்ள நிலையில், இவற்றின் அழிவு இலங்கைக்கு மிகப் பெரும் இழப்பு என மன்னார் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த மாதம் மன்னார் கடலோரத்தில் இதே போன்ற பாரிய கடற்பன்றி ஒன்று இறந்த நிலையில், கரை ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.