மட்டக்களப்பு வவுணதீவு காந்திநகர் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில்; உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று (27) இரவு மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுனக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கமைய சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த காட்டுப்பகுதியில் இருந்து உள்ளூர் தயாhரிப்பு துப்பாக்கியை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
இதேவேளை பாவக்கொடிச்சேனை பகுதியில் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்