மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் டெங்கினால் ஒருவர் இன்று உயிரிழப்பு ; 114 பேர் பாதிப்பு

304 0

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் டெங்கினால் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை இந்த பகுதியில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ..லதாகரன் தெரிவத்தார்.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கத்தினாhல் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனா. எனவே கொரோனா மற்றும் டெங்கு தொற்றுக்கு எதிராக போராடிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

இருந்தபோதும் தற்போது கொரோனாவினால் வீட்டில் முடங்கியிருக்கும் பொதுமக்கள் தமது வீடுகளில்; கழிவு நீர் தேங்கி நிற்கும் பகுதிகள் போன்றவற்றை சுத்;தப்படுத்தி இந்த டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த வீட்டினை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்