கிளிநொச்சியில் சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் என்னும் செயலமர்வொன்று இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் எனும் தொனிப்பொருளிலான செயலமர்வில், கலாநிதி ஜெகான் பெரேரா கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கலாநிதி ஜெகான் பெரேரா,
நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக சமயங்களினூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் ஒன்றாகும். இதற்கமைய மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கி அடுத்து வரும் 26 மாதங்களுக்கு பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய செயலமர்வில், இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.