கல்வி வளர்ச்சியில் இறுதி வலயமாக உள்ள கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்து உரையாற்றிய மு.சந்திரகுமார்,
கல்வி வளர்ச்சியில் கிளிநொச்சி மாவட்டம் தொடர்ந்தும் இலங்கையில் கடைசி வலயமாக காணப்படுகிறது. இது ஆராக்கியமான விடயமல்ல.எனவே கிளிநொச்சியில் கல்வி வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்ட 101 மாணவர்களுக்கும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியில் புத்தக பை மற்றும் கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்த முருகேசு சந்திகுமார் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர், மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,பெருமளவு பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்