பொலன்னறுவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகமுன எனும் பகுதியில் வடை வியாபாரம் செய்து வந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறால் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்குச் சென்றுள்ளார். இதனையடுத்தே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பகமுன பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வடை வியாபாரியொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.