கச்சத்தீவு தொடர்பில் – ராதாகிருஸ்ணன்

301 0

625-500-560-350-160-300-053-800-900-160-90கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள அந்தோனியார் கோவில் திறப்பு விழாவுக்கு தமிழக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
இந்த பிரச்சினை தமிழக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார துறை அமைச்சை தொடர்பு கொண்டு தான் உரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த விழாவுக்கு தேவாலயத்தை நிர்மானித்த உபயதாரர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தமிழகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களை மாத்திரம் குறித்த விழாவில் கலந்து கொள்ள செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதாகவும் பொன் ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.