கொரோனா அச்சம் – நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு பூட்டு

282 0

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும் என்றும் அதன் பணியாளர்களை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பாதுகாப்புக்காக சேவையில் அமர்த்தப்பட்ட விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதி முற்றாக கிருமிநீக்கம் செய்யப்படவுள்ளதுடன், மீண்டும் 28ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.