உலகெங்கும் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் இந்த ஆண்டு இறுதியில் சில வகை செல்போன்களுக்கு நிறுத்தப்பட இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் பிரபலமான குறுந்தகவல் அனுப்பும் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் சில நாட்களுக்கு முன் ஏழு வயதை கடந்தது.
குறுந்தகவல் செயலிகளில் உலகெங்கும் பிரபலமான செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்பில் இனி வரும் மாதங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தகவல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் வகையில் புதிய மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் துவங்கி பல ஆண்டுகள் கடந்து வந்திருக்கும் நிலையில், பயனர்களின் கருவிகளை பொருத்த வரை மாற்றங்கள் அதிகளவு காணப்படுகின்றன.
வாட்ஸ்ஆப் செயலி துவங்கப்பட்ட 2009 ஆண்டில் மக்கள் பயன்படுத்திய கருவிகளில் சுமார் 70 சதவிகித இயங்குதளங்கள் பிளாக்பெரி மற்றும் நோக்கியா நிறுவனங்களுடையதாக இருந்தது.
இன்றைய மொபைல் போன்களில் கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் இயங்குதளங்கள் சுமார் 99.5 சதவிகித கருவிகளில் இயங்குகின்றன.
ஆனால் அப்போதைய காலகட்டத்தில் வெறும் 25 சதவிகித கருவிகளில் மட்டுமே இந்த இயங்குதளங்கள் இயங்கின.
இனி வரும் ஆண்டுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளங்களுக்கு ஏற்ப வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையானது பின்வரும் இயங்குதளங்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10
நோக்கியா ளு40
நோக்கியா சிம்பயான் ளு60
ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2
விண்டோஸ் போன் 7
ஐபோன் 3புளு ஃ ஐஓஎஸ் 6
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இயங்குதளங்கள் வாட்ஸ்அப் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்திருந்தாலும், இந்த இயங்குதளங்கள் வாட்ஸ்அப் மேம்படுத்தல்களுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தினால் இவற்றுக்கான சேவை நிறுத்தப்படுகிறது என வாட்ஸ்அப் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10, நோக்கியா ளு40, நோக்கியா சிம்பயான் ளு60 உள்ளிட்ட இயங்குதளங்களுக்கான சேவை மட்டும் ஜூன் 30, 2017 வரை நீட்டிக்கப்படுகிறது.