திம்புல்ல டெவோன் நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வாலிபர் திம்புல்ல பிரதேசத்திற்கு சமய நிகழ்வொன்றிற்காக வருகை தந்த நிலையில் , நண்பர்களுடன் இணைந்து நீராட சென்ற வேளையிலேயே குறித்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
இளைஞர் நீரிழ் மூழ்கிய பின்னர் காவற்துறை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து அவரின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.
அவரின் உடலம் தற்போதைய நிலையில் கொடகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.