களுத்துறை மாவட்டத்தின் மூன்று பகுதிகளுக்கும் ஊரடங்கு நீடிப்பு!

303 0

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பேருவளை, பயாகலை முதலான பொலிஸ் பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை ஐந்து மணியுடன் நீக்கப்படும் என இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில், கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை முதலான பொலிஸ் பிரிவு பகுதிகளில் இன்று மாலை 6 மணிமுதல் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.