விஷேட அதிரடிப்படையினரால் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு – இருவர் கைது

355 0

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் சட்ட விரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று(25) காலை 10 மணியளவில் அப்பகுதிக்கு சென்ற விஷேட அதிரடிப் படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 பெரிய மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தி சென்ற இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதோடு கடத்தலுக்கு பயன்படுத்திய கப் ரக வாகனத்தையும், மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றபட்ட முதிரை குற்றிகளும் கைது செய்யப்பட்டவர்களும் வவுனியா ஈச்சங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது