என்னை நாட்டை விட்டு வெளியேற்ற அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்வி- குமார் குணரட்ணம்

323 0

 

kumar-kunaradnamதன்னை நாட்டை விட்டு வெளியேற்ற அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து நேற்றையதினம் விடுதலையான குமார் குணரட்ணம் இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம், தன்னை நாட்டைவிட்டு வெளியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

எனினும் தற்போது அந்த விடயம் முடியாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் தனது பிரஜாவுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பட்சத்திலேயே, தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.