7 துப்பாக்கிகளுடன் 5 சந்தேக நபர்கள் கைது

315 0

திருக்கோவில் பகுதியில் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 7 துப்பாக்கிகளுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போரா 12 வகை துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 5 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

26, 29 , 44, 46, 68 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் திருக்கோவில் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.