பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வெள்ளைச் சிங்கம்- வங்கப் புலியின் நட்பு!

332 0

துருக்கியிலுள்ள  விலங்கியல் பூங்காவில் வெள்ளைச் சிங்கமும், வங்கப் புலியும் நட்புடன் பழகி வருவது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்தான்புல்லிலுள்ள அஸ்லான் விலங்கியல் பூங்காவில் பாமுக் என்ற வெள்ளைச் சிங்கமும், டோபி என்ற வங்கப் புலியும் 4 மாதக் குட்டிகளாக இருந்த போது குறித்த விலங்கியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந் நிலையில் தற்போது இயற்கைக்கு முரணான நட்புடன் இரு விலங்குகளும் இருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனைப் பிரிக்க முயன்றபோது இரு விலங்குகளும் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், அதனால் பிரிக்க வேண்டிய நிர்பந்தம் எழவில்லை என  விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்