சிறிலங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

250 0

சிறிலங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 33 ஆயிரம் பேர் பொது சுகாதார பரிசோதகர்களினால் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து நாடாளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 7 ஆயிரத்து 128 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.