இலங்கை மாணவர்களுக்குத் தடை

338 0

marsblogஇலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்தியாவில் மாணவர்கள் மருத்துவ துறையில் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு ஒன்றுக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ கற்கைக்காக வரும் மாணவர்கள் அந்த நாட்டில் நடத்தப்படுகின்ற விசேட பரீட்சையில் பங்குபற்றி தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய நடைமுறையின் மூலம், இந்தி மாணவர்களுக்கும் வெளிநாடடில் வசிக்கும் இந்தியர்களுக்கும் மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படுவதாக ஈரான் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ துறை சார்ந்த கற்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

பெரும்பாலான இலங்கை மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவின் புதிய நடைமுறையிலனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கல்வி கற்பதற்காக செல்லும் மாணவர்களுக்கு தடை ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.