தஜிகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மன் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் எதிர்வரும் 15ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி ஜனாதிபதி பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருடன் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் ரஹ்மன் கொழும்பு வர்த்தக சங்கத்துடனும் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடல்களின்போது விவசாயம், மின் வலு உற்பத்தித்துறை, கனிமத்துறை மற்றும் கனிமத்துறை கொள்கைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.