செக் குடியரசு நாட்டு துணை பிரதமருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஐரோப்பாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் அரசு தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் செக் குடியரசு நாட்டின் விவசாயத்துறை மந்திரி மிரோஸ்லாவ் தோமனுக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே அவருடன் இணைந்து பணியாற்றி வரும் துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான ஜன் கமாசெக் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.